பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து இஸ்லாமியர்கள் தியாக திருநாளை கொண்டாடினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்லாமிய மக்களின் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையையொட்டி தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் நேற்று காலை 7.50 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. ஜாமியா பள்ளிவாசல் இமாம்கள் ஷேக்உதுமான் ஆலிம், அப்துல் ஆலிம் ஆகியோர் தலைமை தாங்கி தொழுகை நடத்தினர்.
அப்போது உலக மக்கள் சுபிட்சமாக வாழவும், நாடு வளம்பெற மழை வேண்டியும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரகுமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடியில் ஜாகிர்உசேன் நகர், ரகுமத்நகர், முத்தையாபுரம், திரேஸ்புரம், ஜெய்லானிதெரு, மேட்டுப்பட்டி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.
மேலும் தியாகத்திருநாளில் மக்கள் ஆடு, மாடு உள்ளிட்டவைகளை குர்பானி கொடுப்பது வழக்கம். குர்பானி கொடுக்கப்படும் இறைச்சி 3 பங்காக வைக்கப்பட்டு, ஒன்று குடும்பத்தினருக்கும், ஒன்று உறவினர்களுக்கும், ஒரு பங்கு ஏழைகளுக்கும் வழங்கப்படுகிறது. தூத்துக்குடியில் ஏராளமான மாடுகளும், ஆடுகளும் குர்பானியாக ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு தொழுகையை அபுசலாம் நடத்தினார். அசார் குத்பா பேரூரை நிகழ்த்தினார். இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் ஏழைகளுக்கு இறைச்சி, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று காயல்பட்டினத்தில் உள்ள அருஷியா பள்ளி, பெரியகுத்பா பள்ளி, சிறிய குத்பா பள்ளி, சிறுநயினார் கொடிமரத்து பள்ளி, தைக்கா தெரு பள்ளி, காட்டு தைக்கா பள்ளி, காட்டு மொகதூம் பள்ளி, தாயிம் பள்ளி உள்ளிட்ட 64 பள்ளிவாசல்களிலும், 25 பெண்கள் தைக்காக்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பக்ரீத் பண்டிகையையொட்டி காயல்பட்டினம் நகரம் விழாக்கோலம் பூண்டு இருந்தது.
கோவில்பட்டி செக்கடி தெரு டவுன் ஜாமிஆ பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் இமாம் முகமது அலி தொழுகை நடத்தினார். பள்ளிவாசல் தலைவர் முகமது நயினார், செயலாளர் அமானுல்லா, துணை செயலாளர் சிந்தா மதார், பொருளாளர் பீர் மைதீன், ஷேக் அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழுகை முடிந்ததும், ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். ஏழைகளுக்கு இறைச்சி, அரிசி உள்ளிட்ட உதவிகளை வழங்கினர்.
உடன்குடி- பரமன்குறிச்சி ரோடு தாயிப் நகரில் தக்வா மஸ்ஜித் அமைப்பு சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. பேராசிரியர் முகமது முகைதீன் சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். உடன்குடி எம்.ஜி.ஆர். நகர் திடலிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.
செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசல் திடலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. அபுதாஹிர் சிறப்பு தொழுகை நடத்தினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.