கொல்லங்கோடு அருகே வீட்டுக்குள் பிணமாக கிடந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர்
கொல்லங்கோடு அருகே வீட்டுக்குள் பி.எஸ்.என்.எல். ஊழியர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை புதுவெல் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன் (வயது 63). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவர் தனது மனைவி, பிள்ளைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேலும், அடிக்கடி அந்த பகுதியில் உள்ள கோவிலில் சென்று தங்குவது வழக்கம். எனவே, இவரது வீடு பெரும்பாலான நேரங்களில் பூட்டி கிடக்கும்.
இந்தநிலையில், இவரது வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது, வேலாயுதன் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்குமேல் ஆகியிருக்கலாம் எனத்தெரிகிறது. இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த வேலாயுதன் கடந்த ஓரிரு தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா?, அவர் எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.