தர்மபுரி மாவட்டத்தில், குருபெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
குருபெயர்ச்சியையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி,
குருபகவான் கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு நேற்று பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன், முருகன் கோவில்களில் நேற்று குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடுகளும் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குருபெயர்ச்சி விழாவின்போது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், கடகம், துலாம், மீனம் ஆகிய ராசிகளை உடைய பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர். இதேபோன்று குருபெயர்ச்சியால் நன்மைபெறும் ராசிகளான மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம் ஆகிய ராசிகளை சேர்ந்த பக்தர்களும் குருபகவானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்கள்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள ஸ்ரீவீனதட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகபூஜைகளும், பரிகார பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனமர் மல்லிகார்ஜூன சாமி கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதேபோன்று தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், தர்மபுரி கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், எஸ்.வி.ரோடு சாலைவிநாயகர் மற்றும் சுப்பிரமணியசாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில், மதிகோன்பாளையம் சிவன்கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன், முருகன் கோவில்களிலும் குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.