நவிமும்பை அருகே சிறுமியை கற்பழித்து கொல்ல முயற்சி 4 மணி நேரத்தில் வாலிபர் கைது
நவிமும்பை அருகே சிறுமியை கற்பழித்து கொல்ல முயன்ற வாலிபர் 4 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
நவிமும்பை அருகே சிறுமியை கற்பழித்து கொல்ல முயன்ற வாலிபர் 4 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி கற்பழிப்புநவிமும்பை அருகே உள்ளது ஒவே கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கி சென்று கற்பழித்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக கதறி இருக்கிறாள்.
இதனால் தன்னை காட்டி கொடுத்து விடுவாளோ என்ற பயத்தில் வாலிபர் சிறுமியை கொலை செய்யும் முயற்சியில் கழுத்தை நெரித்தார். இதில் அவள் மயங்கி விழுந்தாள். இதையடுத்து அந்த வாலிபர் அவள் இறந்து விட்டதாக கருதி அங்கிருந்து ஓடி விட்டார்.
வாலிபர் கைதுஇந்த நிலையில், மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி ஆடையில் ரத்தகறையுடன் அங்குள்ள ஒருவரது வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி உதவி கேட்டாள். அவர்கள் சிறுமியை அவளது வீட்டில் கொண்டு போய் ஒப்படைத்தனர். மகளின் நிலைமை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் சிறுமியை கற்பழித்து கொலை செய்ய முயன்றது கோபோலியை சேர்ந்த ஜான் அன்வர் ஆலன் (வயது23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.