விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி மாணவர்கள்- இளைஞர்கள் தொடர் உண்ணாவிரதம்
அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு விசாரணை கமிஷன் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி மாணவர்கள்-இளைஞர்கள்
திருச்சி,
திருச்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
‘நீட்‘ தேர்வுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா குழுமூர் காலனி தெருவை சேர்ந்த மாணவி அனிதா தனது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவி அனிதா தற்கொலைக்கு தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும், திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்ட குழுவும் சேர்ந்து நேற்று திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி எதிரே தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக நேற்று முன்தினம் இரவே ஏற்கனவே ‘வாட்ஸ்-அப்‘ மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த போராட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி பெறவில்லை.
இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் சிவா, திருச்சி மாவட்ட செயலாளர் தினேஷ், ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவை சேர்ந்த திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவிகள் இளைஞர்கள் அரசு மருத்துவ கல்லூரி எதிரே உள்ள திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு அலுவலகம் முன்பு சாமியானா பந்தல் அமைத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், நாளைய மருத்துவரை இழந்து விட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அமர்ந்திருந்தனர். மேலும் தமிழகத்தின் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்த பிரேம்குமார்-நித்யா தம்பதியினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனுமதியின்றி நடைபெறும் இந்த போராட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே போராட்டம் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.