‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சீர்காழியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ‘நீட்‘ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘நீட்‘ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் காமராஜ், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, சட்டமன்ற தொகுதி செயலாளர் தாமு இனியவன், நகர செயலாளர் இனியதமிழன், மாநில நிர்வாகி தலித்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய-மாநில அரசுகள் தமிழகத்தில் ‘நீட்‘ தேர்வை ரத்து செய்ய வேண்டும். 1,176 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வினால் மருத்துவ சீட்டு கிடைக்காமல் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும். அனிதாவின் சாவுக்கு மத்திய-மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், கட்சி நிர்வாகிகள் கனிவண்ணன், மணிமாறன், ஆசைதம்பி, சந்திரமோகன், ஞானவள்ளி, ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.