மாணவி அனிதா தற்கொலை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்
மாணவி அனிதா மரணத்தை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
நீட் தேர்வை எதிர்த்து போராடிய அரியலூர் மாணவி அனிதா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தவறியதாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட பொருளாளர் முனிராவ், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பர்கூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் மன்னர்மன்னன், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி செயலாளர் தியாகு, மாநில நிர்வாகிகள் அசோகன், சரவணன், குபேந்திரன், அருண், ரமேஷ், சசிக்குமார், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது நீட் தேர்வு விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூரில், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பின் சார்பில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் மாநில துணைத்தலைவர் பரசுராமன், செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசினார்கள். இதில், வெங்கடேசன், முருகேசன், காந்தன், தமிழ்செல்வி, ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூளகிரியில் தி.மு.க. சார்பில் அனிதாவின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சூளகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் போது, அனிதாவின் படத்துக்கு மலர்கள் தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், சூளகிரி ஊராட்சி முன்னாள் தலைவர் பாக்கியராஜ் மற்றும் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்ட பொருளாளர் அம்பரீஷ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட தலைவர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை 4 ரோடு சந்திப்பில் சமூக ஆர்வலர்கள், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மத்தூர் பஸ் நிலையத்தில் மாணவி அனிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் மாதையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் திருப்பதி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் பழனியம்மாள், திராவிடர் கழக நிர்வாகி முருகேசன், தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சியினர், தர்மபுரி 4 ரோட்டில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராமன், செய்திதொடர்பாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் மின்னல் சக்தி, மாவட்ட துணைசெயலாளர் சக்தி, நிர்வாகிகள் ராஜா, கிள்ளிவளவன் மற்றும் கட்சியினர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அங்கு வந்த போலீசார், அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 55 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி தலைமை தாங்கினார். மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் டாக்டர் முனிரத்தினம் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட தலைவர் மாது, நகர செயலாளர் பூபால், நகரதலைவர் ரவீந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் திருப்பதி, மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ், பேரவை மாவட்ட செயலாளர் வசந்தராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மண்டல நிர்வாகி கோபிநாத், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அன்பு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தர்மபுரி டவுன் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.