‘ஆன்லைன்’ விளையாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
தூத்துக்குடியில் ஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரின் மகன் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் தொடர்ந்து தனது பெற்றோரிடம் ஆன்லைன் விளையாட்டு விளையாடுவதற்காக செல்போனை தருமாறு கூறி தகராறு செய்தாராம். செல்போனை தர மறுத்ததால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று செயல்பட்டாராம். இதனால் அந்த மாணவனை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மனநலபிரிவில் சேர்த்து உள்ளனர். அங்கு அவனுக்கு அரை மயக்க நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அந்த மாணவரின் தாய் கூறும் போது, ‘ எனது மகன் 9-ம் வகுப்பு படிக்கும் போது, கம்ப்யூட்டரில் அதிக ஆர்வம் இருந்தது. இதனால் கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று விளையாடி வருவான். தற்போது அவன் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்தான். கடந்த 6 மாதங்களாக அவனுடைய நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. படிப்பில் விருப்பம் இல்லாமல், அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்து விட்டான். அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தான்.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனுடைய செல்போனை வாங்கி வைத்து விட்டோம். இதனால் அவன் செல்போனை கேட்டு தொடர்ந்து வீட்டில் தகராறு செய்து வந்தான். சில நாட்களுக்கு முன்பு கையில் கத்தியால் கீறிக் கொண்டான். உடனடியாக அதற்கு சிகிச்சை அளித்தோம். ஆனாலும் தொடர்ந்து ஆன்லைனில் விளையாட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறான்.
எனது மகன் நீல திமிங்கலம் விளையாட்டை விளையாடவில்லை. வேறு ஒரு ‘ஆன்லைன்’ விளையாட்டைத்தான் விளையாடினான். அந்த விளையாட்டும் விபரீதமாக மாறி இருக்கிறது. இதனால் எங்களுக்கு பயமாக உள்ளது. மகனை உயிருடன் காப்பாற்ற வேண்டும். தற்போது அரை மயக்கநிலையிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் இருந்து மகன் விடுபட்டு வர வேண்டும், என்று கூறினார்.