பெத்ததாளப்பள்ளியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 13-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. இதையொட்டி கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் நடந்த கோமாரி நோய் விழிப்புணர்வு தடுப்பூசி முகாமை கலெக்டர் கதிரவன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இந்த முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. கால்நடைகளை தாக்க கூடிய கோமாரி நோயை தடுக்கும் பொருட்டு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடைகளை வளர்த்து வரும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் டாக்டர் வேலாயுத பெருமாள், தாசில்தார் கன்னியப்பன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு அரங்கை கலெக்டர் கதிரவன் திறந்து வைத்தார். இதில் உணவு பொருட்கள் வாங்கும் போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. மேலும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சியில் கடுகு, சீரகம், பட்டாணி, பருப்பு வகைகள், சோம்பு, பேரிச்சம் பழம், டீத்தூள் போன்றவை தரமானவை எது என்றும், போலி எது என்றும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், மற்றும் உணவு பாதுகாப்பு துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.