சேலம் கிச்சிபாளையத்தில் இறந்த வாலிபர் அருந்திய மதுவில் விஷம் கலப்பு
சேலம் கிச்சிபாளையத்தில் இறந்த வாலிபர் அருந்திய மதுவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. அதையொட்டி அவரது அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் கிச்சிபாளையம் களரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவருக்கு கார்த்திக் (வயது 19), ஹரி (18) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். அதேபகுதியில் உள்ள பாக்குமட்டை கம்பெனியில் ஹரி வேலை செய்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த விஜி என்பவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் கார்த்திக் வாங்கி வந்த மதுவை ஹரியும், விஜியும் அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்கு சென்ற அவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். பின்னர், சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் ஹரி உயிரிழந்தார்.
சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் விஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஹரி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் போலீசாருக்கு தெரியாமல் இறுதிச்சடங்கு செய்ய முயன்றதை அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் அன்பு மற்றும் கிச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஹரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கார்த்திக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மது எப்படி கிடைத்தது? யாரிடம் இருந்து வாங்கி வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, கிச்சிபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் இருந்து மதுபாட்டில் வாங்கி வந்ததாகவும், அதை தான் தம்பி ஹரி மற்றும் அவரது நண்பர் விஜி ஆகியோருக்கு கொடுத்ததாகவும் போலீசாரிடம் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆனால் டாஸ்மாக்கடையில் உள்ள மதுபாட்டிலா? அல்லது போலி மதுவா? என்பது எனக்கு தெரியாது என்று அவர் முதலில் மறுத்தார்.
அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் ஹரி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் முதலில் விசாரணை நடத்தினர்.
அதேசமயம், மது அருந்திய சிறிது நேரத்தில் ஹரி இறந்துள்ளதால், மதுவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதனிடையே பிரேத பரிசோதனையில் ஹரி அருந்திய மதுவில் விஷம் கலந்திருப்பதாக டாக்டர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து ஹரியின் அண்ணன் கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, அன்னதானப்பட்டியில் உள்ள மதுக்கடையில் கார்த்திக் மது அருந்தியுள்ளார். அப்போது, அங்கு குடித்துவிட்டு யாரோ ஒருவர் பாதி வைத்திருந்த மதுபாட்டிலை வீட்டிற்கு எடுத்து வந்து அதை தனது தம்பிக்கும், அவரது நண்பருக்கும் கொடுத்துள்ளார். பிறகு மதுவை அருந்திய ஹரி சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடலில் விஷம் கலந்ததால் அவர் உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனால் மதுவில் விஷம் கலந்தது யார்? கார்த்திக் உண்மையை சொல்கிறாரா? அல்லது தம்பி மரணத்தை மறைக்க நாடகம் ஆடுகிறாரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சேலம் தெற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் அன்பு தெரிவித்தார்.