குமரி மாவட்டத்தில் அறிமுகம்: விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைய புதிய இணையதள சேவை
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பயன் அடைவதற்காக புதிய இணையதள சேவை குமரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சேவையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
தமிழக காவல்துறை பொதுமக்களுக்கு சேவையை மேம்படுத்தி வழங்குவதற்காக 2 புதிய இணையதள சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு ஆவணங்களை பெறும் வசதி, தொலைந்து போன ஆவணங்கள் பற்றி புகார் அளிக்கும் வசதி ஆகிய 2 வசதிகளும் http://ese-rv-i-ces.tnp-o-l-i-ce.gov.in என்ற இணையதள சேவை மூலம் வழங்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் இந்த புதிய இணையதள சேவைகள் தொடக்க விழா நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் கலந்துகொண்டு புதிய இணையதள சேவைகளை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது இழப்பீட்டு தொகையை விரைவில் பெற்று பயனடைய உதவி செய்வதற்காக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் வக்கீல்கள் இதன் மூலம் ஆவணங்களை சுலபமாக பெறலாம். இதன் மூலம் இனி போலீஸ் நிலையத்துக்கு அலைய வேண்டியது இருக்காது. புலன் விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை அடிப்படையாக கொண்டு பயனீட்டாளருக்கு அனுமதி வழங்கப்படும்.
நெட் பேங்க் வசதியை பயன்படுத்தி ஒரு ஆவணத்துக்கு ரூ.10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவைவை அரசு இ-சேவை மையத்துடன் ஒருங்கிணைப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
இதுபோல் பாஸ்போர்ட், வாகனம் பதிவு சான்று, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனாலும் இந்த இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். பயனீட்டாளரின் தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி. எண் அடிப்படையில் அங்கீகாரம் உறுதி செய்யப்படும்.
தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்த ஆவண அறிக்கை, ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன் உடனடியாக பயனீட்டாளருக்கு அளிக்கப்படும். அதே சமயத்தில் இந்த அறிக்கையின் நகல் அவரின் மின்னஞ்சல் கணக்கிற்கும் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பயனடைவதற்காக இணையதள சேவை தொடங்கப்பட்டு 488 விபத்து வழக்குகள் குறித்த ஆவணங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு 20-ந்தேதி வரை 791 விபத்துகள் நடந்தன. அதில் 208 பேர் உயிரிழந்துள்ள னர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு 20-ந்தேதி வரை விபத்துகளின் எண்ணிக்கை 768 ஆக குறைந்திருக்கிறது. இந்த விபத்துகளில் 203 பேர் பலியாகியுள்ளனர். சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி வருவதால் விபத்துகள் குறைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கோபி, மகேந்திரன், கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் செய்திருந்தார்.