கோவில்பட்டியில் பயங்கரம் ஆம்புலன்சு டிரைவர் தலை துண்டித்து கொலை
ஆம்புலன்சு டிரைவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மின்தடை ஏற்பட்ட போது இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் நடந்த இந்த பயங்கர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் காந்தாரி முத்து (வயது 55), இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று இரவு 8 மணி அளவில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் தனது ஆம்புலன்சை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள கடை முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது. திடீரென்று மின்சாரம் தடைபட்டது.
அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் திடீரென்று காந்தாரி முத்துவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்து, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது தலை துண்டாகி தொங்கிய நிலையில் இருந்தது.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் கொலை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் நின்றவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காந்தாரி முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:-
கோவில்பட்டி புதுகிராமத்தைச் சேர்ந்த முகமது ரபீக் மகனை, காந்தாரி முத்துவின் குடும்பத்தினர் கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக காந்தாரிமுத்துவின் இளைய மகன் கருப்பசாமியை கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஓடும் பஸ்சில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் காந்தாரிமுத்துவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே இந்த கொலையில் முகமது ரபீக்கின் குடும்பத்தினர் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.