காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி கொலையில் பிளஸ்-2 மாணவர் கைது
காரிமங்கலம் அருகே பள்ளி மாணவி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள உத்தண்டிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவன், அரசு பஸ் டிரைவர். வீட்டின் அருகில் பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார். இவருடைய மகள் வனிஷா (வயது 14). இவள் மாட்லாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 27-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த வனிஷா கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்தாள்.
இந்த கொலை தொடர்பாக காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வனிஷாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த மாணவரை கைது செய்தனர்.
கைதான மாணவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
கடந்த 27-ந் தேதி தனது வீட்டை ஒட்டியுள்ள தந்தையின் பெட்டிக்கடையில் வனிஷா மட்டும் தனியாக இருந்தாள். அவள் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட நான் கடைக்கு சென்று பிஸ்கட் பாக்கெட் வேண்டுமென்று கேட்டேன். அப்போது கடையில் இருந்த வனிஷா கத்தையாக ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தாள். பணத்தை பார்த்ததும் அதை எப்படியாவது திருடிவிட வேண்டுமென்று திட்டம் போட ஆரம்பித்தேன்.
நான் கேட்ட பிஸ்கட் கடையில் இல்லை என்று வனிஷா சொன்னதும், நான் அங்கிருந்து சென்று ஓரமாக நின்றுகொண்டு கடையில் இருந்த வனிஷாவையே நோட்டமிட்டேன். வனிஷா வீட்டிற்குள் சென்றபோது நான் விரைந்து கடைக்கு சென்று, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று மறுபடியும் அதே இடத்தில் எதுவும் தெரியாதது போல் நின்று கொண்டேன்.
வீட்டில் இருந்்து கடைக்கு வந்த வனிஷா கல்லா பெட்டியில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். மேலும் என் மீது சந்தேகம் ஏற்பட்டு என்னை மிரட்டி கேட்டாள். பயத்தில் நானும் உண்மையை ஒப்புக்கொண்டு பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, இதை யாரிடமும் சொல்லி விடாதே என்று கெஞ்சினேன். அதன் பிறகு அங்கிருந்து வந்து விட்டேன். ஆனாலும் இதுகுறித்து யாரிடமாவது வனிஷா சொல்லி விட்டாள் என்ன செய்வது என்று பயத்தில் இருந்தேன்.
அப்போது வனிஷா வீட்டில் தனியாக இருந்தாள். இதையடுத்து நான் அவளுடைய வீட்டிற்குள் சென்று கதவை பூட்டினேன். என்னை பார்த்ததும் வனிஷா சத்தம் போட்டாள். மேலும் கையில் இருந்த கரண்டியால் தாக்கினாள். இதனால் ஆத்திரமடைந்த நான் கீழே கிடந்த எடை கல்லால் அவளை தாக்கினேன். அதில் அவள் மயங்கி விழுந்தாள்.
ஆனாலும் நான் திருடியதை ஊர்க்காரரிடம் சொல்லி விடுவாள் என பயந்து சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து வனிஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து எனது வீட்டிற்கு சென்று விட்டேன். ஆனால், போலீசார் விசாரணையில் நான் மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பணத்துக்காக பள்ளி மாணவியை, பிளஸ்-2 மாணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.