தர்மபுரி மாவட்டத்தில் இணையதளம் மூலம் விபத்து வழக்கு ஆவணங்களை பெறும் வசதி
தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை இணையதளம் மூலம் விபத்து வழக்கு ஆவணங்களை பெறும் வசதியை போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி,
தமிழக காவல்துறை இணையதளம் மூலம் 2 புதிய இணையதள வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு ஆவணங்களை பெறும் வசதி மற்றும் தொலைந்து போன ஆவணங்கள் தொடர்பான ஆவண அறிக்கையை பெறும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் இந்த இணையதள வசதிகள் தொடக்க நிகழ்ச்சி, தர்மபுரியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் கலந்து கொண்டு இணையதள வசதியை தொடங்கி வைத்து வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சாலைவிபத்து வழக்கு ஆவணங்களை இணையதளத்தில் பகிரும் முறை மூலம் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையை விரைவாக பெற முடியும். புலன் விசாரணையின்போது காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை அடிப்படையாக கொண்டு பயனீட்டாளருக்கு இந்த சேவை வழங்கப்படும். அரசு இ-சேவை மையத்துடன் இந்த சேவையை ஒருங்கிணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதேபோல் ஆவணங்கள் தொலைந்தது குறித்த அறிக்கையை பெறுவதற்கான இணையதள வசதி காவல்துறை இணையதளத்தின் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தொலைந்தால் இந்த முறை மூலம் போலீசாரிடம் புகார் அளித்து அறிக்கையை பெறலாம். பான்கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து தேவையான தகவல்களை சமர்ப்பித்து தொலைந்த ஆவணம் தொடர்பான அறிக்கையை தனித்துவம் வாய்ந்த குறிப்பு எண்ணுடன் பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.