ஊரப்பாக்கத்தில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை திருட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் கோதண்டராமன் தெருவை சேர்ந்தவர் சிவாஜி (வயது 71), இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றார்.

Update: 2017-08-31 22:15 GMT
வண்டலூர்,

பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்றுபார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.18 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிவாஜி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.

இதே போல ஊரப்பாக்கம் கோதாவரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து ஆவுடையப்பன் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்