வடலூர் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் மகன், தலை துண்டித்து படுகொலை
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் மகன், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். மனைவியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கண்டித்ததால், அவரது நண்பர் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
வடலூர்,
வடலூர் அருகே உள்ள ஆபத்தாரணபுரம் இளவரசம்பட்டை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவருடைய மகன் ஆனந்தராஜ்(வயது 35), விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூரியா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி இரவு 11 மணிக்கு ஆனந்தராஜ் வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிச்சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஆனந்தராஜின் அண்ணன் சிவசங்கர்(40), வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், வயலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற தனது தம்பியை காணவில்லை. எனவே கண்டு பிடித்து தருமாறு கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் ஆபத்தாரணபுரத்தில் உள்ள தைலமரத்தோப்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வடலூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டனர். உடலில் தலை இல்லாததால், அவர் யார் என்பது பற்றி அடையாளம் காணமுடியவில்லை. இறந்து கிடப்பது ஆனந்தராஜாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே அதை உறுதிபடுத்துவதற்காக ஆனந்தராஜின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து, அழுகிய நிலையில் கிடந்த அந்த உடலை பார்வையிட்டனர். உடலில் அணிந்திருந்த உடை மற்றும் சில அடையாளங்களை வைத்து, இறந்து கிடப்பது ஆனந்தராஜ்தான் என்று அவரது மனைவி சூரியா மற்றும் உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
அப்போதுதான் ஆனந்த ராஜை யாரோ தலையை துண்டித்து கொலை செய்திருப்பதும், உடலை தைலமரத்தோப்பில் போட்டுவிட்டு, தலையை மட்டும் வேறு எங்கேயோ வீசிச்சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் அவரது தலையை தேடிப்பார்த்தனர். அப்போது அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆனந்தராஜின் தலை மிதந்தது. இதனை தொடர்ந்து ஆனந்தராஜின் தலை மற்றும் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். முதற்கட்டமாக சூரியா மற்றும் ஆனந்தராஜின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
ஆனந்தராஜூம், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் முருகன்(29) என்பவரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் இவர்கள் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்களாம். இதன்காரணமாக ஆனந்தராஜின் வீட்டுக்கு முருகன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அவ்வாறு வந்தபோது முருகனுக்கும், ஆனந்தராஜின் மனைவி சூரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் ஆனந்தராஜ், இருவரையும் கண்டித்தார். இருப்பினும் முருகன், சூரியாவை சந்தித்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆனந்தராஜ் கண்டித்ததற்கு பிறகு சூரியா, முருகனிடம் சரியாக பேசவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக ஆனந்தராஜை, முருகன் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக முருகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகுதான் முழுவிவரமும் தெரியவரும். இந்த சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.