கல்லூரிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பரங்கிப்பேட்டையில் கல்லூரிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-09-01 00:30 GMT

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அப்பாசாமி படையாட்சி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். ஆட்டோ டிரைவர். இவரது மகள் கனிமொழி(வயது 18). இவர் சிதம்பரம் அருகே உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சரியாக படிப்பு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இதையடுத்து கனிமொழியின் பெற்றோர், கல்லூரிக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருந்து வருகிறாய் என்று கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கனிமொழி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கனிமொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கனிமொழியின் தந்தை ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகிறார்.

மேலும் செய்திகள்