கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் வாலிபரை நிர்வாணமாக்கி அடித்து, உதைத்த கொடூரம்

கலபுரகியில் கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை நிர்வாணமாக்கி அடித்து, உதைத்த மனைவியின் கள்ளக்காதலன் மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2017-08-31 20:45 GMT

பெங்களூரு,

கலபுரகியில் கள்ளக்காதலை கண்டித்ததால் வாலிபரை நிர்வாணமாக்கி அடித்து, உதைத்த மனைவியின் கள்ளக்காதலன் மற்றும் அவருடைய நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்காதல்

கலபுரகி புறநகர் காஜிபுரா படாவனேயில் வசித்து வருபவர் ராஜேஷ் (வயது 32). இவருடைய மனைவி ஜோதி (2 பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ஜோதிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ராஜேஷ் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தனது மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி அந்த நபரிடம் கூறியுள்ளார். இருப்பினும், அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை என தெரிகிறது.

நிர்வாணமாக்கி அடி–உதை

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினமும் ராஜேஷ், தனது மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோதியின் கள்ளக்காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேசை சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் அவரை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கினர். பின்னர் அவரை அந்த பகுதியில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ராஜேசை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கலபுரகி புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதியின் கள்ளக்காதலன் மற்றும் அவருடைய நண்பர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்