மதுரவாயலில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் நகை, பணம் திருட்டு

மதுரவாயல் நூம்பல், கிருஷ்ணா நகரில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் மகன் வீட்டில் நகை, பணம் திருட்டு.

Update: 2017-08-16 22:45 GMT
பூந்தமல்லி,

மதுரவாயல் நூம்பல், கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 27). இவர், அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் இவருடைய தந்தை சையதுஅப்துல்ரசாக், லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜமாலுதீன், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. இதுபற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்