மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; வாலிபர் பலி

பெரம்பலூர்,
பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த வாலிபர் குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.