மாதவரத்தில் மதுவிலக்கு வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் ரூ.85 ஆயிரத்துக்கு ஏலம்
மாதவரத்தில் மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில், மதுபாட்டில்கள் கடத்திய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்பட்டது.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில், மதுபாட்டில்கள் கடத்திய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 15 மோட்டார் சைக்கிள்கள் நேற்று ஏலம் விடப்பட்டது. அதில் 11 வாகனங்கள் மட்டும் ரூ.85 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஏலம் எடுத்தோருக்கு உடனடியாக அந்த வாகனம் வழங்கப்பட்டது.
இதில் மதுவிலக்கு கூடுதல் உதவி கமிஷனர் ஞானசேகரன், உதவி கமிஷனர் சுப்பிரமணியராஜு, கோட்ட கலால் அலுவலர் முனியசேகர், மாதவரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.