மனுநீதி நாள் முகாமில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கணியம்பாடி ஒன்றியம் கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. வேலூர் தனித்துணை ஆட்சியர் (நிலஎடுப்பு–சிப்காட்) ஆர்.பூங்கொடி தலைமை தாங்கினார்.
கணியம்பாடி,
கணியம்பாடி ஒன்றியம் கீழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. வேலூர் தனித்துணை ஆட்சியர் (நிலஎடுப்பு–சிப்காட்) ஆர்.பூங்கொடி தலைமை தாங்கினார். கீழ்பள்ளிப்பட்டு ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். வேலூர் தாசில்தார் பாலாஜி வரவேற்றார்.
இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன், வட்ட வழங்கல் அலுவலர் இளஞ்செழியன், சமூக நலத்துறை அலுவலர் கஸ்தூரி, உதவி வேளாண்மை அலுவலர் பாண்டியன், உதவி தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், கால்நடை மருத்துவர் தனபதி, சுகாதார ஆய்வாளர் பிரபு உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து கூறினார்கள்.
முகாமில் 18 பேருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், 6 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை உள்பட 60 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனித்துணை ஆட்சியர் பூங்கொடி வழங்கி பேசினார்.
இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயக்குமார், ரமேஷ், ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் ரேவதி நன்றி கூறினார்.