நாகர்கோவிலில் சுதந்திர தினவிழா கலெக்டர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்
நாகர்கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. இதில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ஆகியோர் மூவர்ண பலூன்களை பறக்க விட்டனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜனும் உடன் சென்றார். அதன் பிறகு போலீசார், தீயணைப்பு படை, ஊர் காவல் படை, தேசிய மாணவர் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படை வீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, வளர்ச்சிப் பிரிவு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சுகாதார துறை, சமூக நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றின்கீழ் மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.
மேலும் 123 அரசு ஊழியர்களுக்கும், தனித்திறமை கொண்ட 4 பேருக்கும் என மொத்தம் 127 பேருக்கு நற்சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பின்னர் பள்ளி மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன. இதில் 5 பள்ளிகளை சேர்ந்த 215 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கலை நிகழ்ச்சிகளை அதிகாரிகளும், பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
கலை நிகழ்ச்சியில் கருங்கல் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல் பரிசையும், குறண்டி ஈஷா மெட்ரிக் பள்ளி இரண்டாவது பரிசையும், மயிலாடி எஸ்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3–வது பரிசையும் பெற்றன. எறும்புக்காடு சாந்தி நிலைய பள்ளிக்கு சிறப்பு பரிசும், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
சுதந்திர தின விழாவில், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராஹூல் நாத், அரசு ரப்பர் கழக மேலாண்மை இயக்குனர் டோக்ரா, மாவட்ட வன அதிகாரி விஸ்வமிஜூ விஸ்வநாதன், உதவி வன அதிகாரி கவுதம், மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் ஜானகி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு உள்பட அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.