இந்த நிதியாண்டில் கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்
கூடங்குளத்தில் 5, 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என வளாக இயக்குநர் எஸ்.வி.ஜின்னா கூறினார்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வளாக இயக்குநர் எஸ்.வி.ஜின்னா தலைமை தாங்கி, மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
பின்னர் செட்டிகுளத்தில் உள்ள அணுவிஜய் நகரியத்தில் நடந்த சுதந்திர தினவிழாவிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை, இந்தியாவில் உள்ள அணு உலைகளில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிற முதல் அணு உலையாகும். முதல் அணு உலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. தற்போது வரை முதல் அணு உலையில் இருந்து 14 ஆயிரத்து 148 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இன்னும் சில நாட்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
இரண்டாவது அணு உலையில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இது இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இதனை கடந்தாண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. முழு உற்பத்தி திறனை கடந்த ஜனவரி மாதம் எட்டியது.
கடந்த மார்ச் மாதம் முதல் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. 2-வது அணு உலையின் மூலம் 4600 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2-வது அணு உலை இந்தியாவில் 22-வது அணு உலையாகும். இந்தியாவில் அணு உலைகளின் மூலம் 6780 மெகாவாட் மின்உற்பத்தி கிடைக்கிறது. கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளின் மூலம் ஒரே நாளில் 1828 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். அதற்கான மண்பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய சமூக மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ரஷ்ய விஞ்ஞானிகளின் கூட்டமைப்பை சேர்ந்த கொரல் ஷென்கோ, 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான தலைமை கட்டுமான பொறியாளர் ஜெய்கிருஷ்ணா, தலைமை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பிள்ளை, கூடுதல் பொது மேலாளர் தனசேகரன், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் தனஞ்செயன் சுக்லா மற்றும் இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.