சுடரொளி தீபம்-சுப்ரஜா
இரவு ஒன்பது மணிக்கு அந்த செய்தி வந்தது ஸ்வப்னாவிற்கு.
அவளது கணவன் ‘மேஜர் ஜெனரல்’ வாசுதேவன், எல்லையில் நடந்த போரில் எதிரிகளை வீழ்த்தி முன்னேறியபோது எதிரி ராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டார் என்ற செய்தி ஸ்வப்னாவின் மனதை இடியாய் தாக்கியது.
அவள் தன் கைப்பேசியை அப்படியே சோபா மீது போட்டாள்.
டி.வியை நியூஸ் சேனலுக்கு மாற்றினாள்.
‘பிளாஷ் நியூஸ்’ ஓடிக் கொண்டிருந்தது.
‘மேஜர் ஜெனரல் வாசுதேவன் கில்ட் இன் பார்டர் வென் எக்சேஜென்ச் பயர்ஸ்’
அதை பார்த்து கண்கலங்கி கொண்டிருந்த ஸ்வப்னாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள் மகள் ஆர்த்தி.
அவள் எட்டாவது படிக்கிறாள்.
“என்னம்மா ஆச்சு” என்று அலறினாள்.
“ஆர்த்தி என்னைக்காவது இந்த செய்தி வரும்ன்னு எனக்கு தெரியும். அதற்காக என்னை என்னைக்கோ நான் தயார் படுத்திக்கிட்டேன், உனக்கு இப்ப சில விஷயங்கள் புரியாது. அப்புறம் புரியும்” என்றாள்.
ஆனாலும் அவள் இமையோரம் நீர் வராமல் இல்லை.
உள்ளே படித்துக் கொண்டிருந்த மகன் ரிஷி ஓடி வந்தான்.
“அம்மா என்ன ஆச்சு?”
விஷயத்தை சொன்னாள்.
“ஓ டாடி” என்று தலையைப் பிடித்துக் கொண்டு அம்மா பக்கத்தில் அழுதபடி உட்கார்ந்தான்.
வாசுதேவன் நேரடியாக மேஜர் ஜெனரல் ஆகவில்லை.
எத்தனை வருஷம், எத்தனை போர்கள்.
எத்தனை குண்டு காயங்கள்.
கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்கள்.
வருடத்திற்கு அறுபது நாள் தான் விடுமுறை.
‘காஷுவல்’ விடுமுறை இருபது நாள்.
ஆனால் அறுபது நாள் அவன் விடுப்பு எடுத்ததே இல்லை.
முப்பது நாள் தான் இருப்பான்.
அதற்குள் முக்கிய அழைப்பு வந்து விடும்.
ஆனால் விடுமுறையில் வரும் போது அவன் முகத்தில் எந்த வித கலவரமும் இருக்காது.
வீட்டுக்கு சேவகம் செய்யும் குடும்ப தலைவனாக மாறி விடுவான்.
வீட்டையே கலகலப்பாக்கி விடுவான்.
குழந்தைகளை ஸ்கூலுக்கு கொண்டு விடுவான்.
முப்பது நாள் வாழ்க்கையை ஒரு வருட வாழ்க்கையாய் வாழ்ந்து விட்டு போவான்.
ஸ்வப்னா அவனை ஒரு முறை கேட்டாள்.
“பண்டிகை நாட்களில் எல்லாம் பசங்க கேட்கறாங்க, அப்பா நம்ம கூட இருக்க மாட்டாரான்னு”
“ஸ்பவ்னா உனக்கு தெரியாதா, உங்கப்பாவும் ராணுவத்தில் இருந்தவர்தானே. எப்ப லீவு கிடைக்கும், எப்ப திருப்பி கூப்பிடுவாங்கன்னு எனக்கே தெரியாது. ஏன் எந்த ராணுவ வீரனுக்கும் தெரியாது. இங்க இருக்கற நாட்களில் ஹேப்பியா இருப்போம்” என்பான்.
சொந்தக்காரர்கள் வீட்டிற்கும் போக மாட்டார்கள்.
அவர்களாக வந்தால் தான் உண்டு.
கணவனின் நினைவுகளில் மூழ்கியிருந்த அவளின் கைப்பேசி உயிர் பெற்றது. எடுத்தாள்.
அப்பா!
“சொல்லுங்கப்பா?” என்றாள் சோகத்தை மறைத்துக் கொண்டு.
“செய்தி பார்த்தியா?”
“பார்த்தேப்பா, அம்மா இல்லையா?”
“ரெண்டு பேரும் கிளம்பிட்டோம். ஆறு மணி நேரத்துல வந்து சேர்ந்துடுவோம். பசங்களை பார்த்துக்கோ” என்றவர் வேதனையோடு போனை வைத்து விட்டார்.
போர் தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட உடனே அவரும் தயாராகி விட்டார் போலிருக்கிறது.
சிறிது நேரத்தில் தரைப்பேசி ஒலித்தது.
எடுத்தாள்.
“மிசஸ் வாசுதேவன்?”
“யெஸ்”
“மேடம் நாங்க மீடியாவில் இருந்து பேசறோம், செய்தி பார்த்திருப்பீங்க, உங்க கணவர் பற்றி வேறு எதுவும் தகவல் வந்ததா?”
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மனதில் பொங்கிய வேதனையை அடக்கிக் கொண்டு ரீசிவரை வைத்தாள்.
ஒரு நிமிடம் யோசித்தவள் டெலிபோனின் கேபிளை உருவிப் போட்டாள்.
இரவு யாருக்கும் சாப்பிட பிடிக்கவில்லை.
நடுராத்திரி இரண்டு மணி அளவில் அம்மாவும், அப்பாவும் வந்து சேர்ந்தார்கள். இருவருமே வாசுதேவனின் அப்பா-அம்மாக்கள்.
“டிரைவர் சாப்பிட்டாராமா”
“நானே வழியில சாப்பிட சொல்லிட்டேன்” என்றார்.
வாசுதேவனின் அப்பாவையும் அம்மாவையும் அவள் அப்பா, அம்மா என்று தான் கூப்பிடுவாள்.
வாசுதேவனின் அம்மா கேட்டாள்.
“உங்கம்மாகிட்டே எதுவும் சொன்னியா?”
“இல்லே அவங்க போன் வந்தப்பவே தூங்கிட்டுதான் இருந்தாங்க. சுத்தமா நடமாட்டம் இல்லே. இருட்ட ஆரம்பிச்ச உடனேயே கஞ்சி கொடுத்து படுக்க வச்சுட்டேன். மாத்திரையையும் கொடுத்துட்டேன். காதும் இப்ப சுத்தமா கேட்காமல் போச்சு” என்றாள் கவலையோடு.
விடிய விடிய விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்
.
ஸ்வப்னா காலர் ஐ.டி. போனை கொண்டு வந்து மாற்றினாள்.
ராணுவ அலுவலகம் சம்பந்தமான போன் தவிர எதுவும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தாள்.
விடியற்காலை ஆறு மணிக்கு போன் வந்தது.
மறு நாள் ஒன்பதரை மணிக்கு வாசுதேவனின் உடல் சென்னை வந்தடையும் என்று தகவல் வந்தடைந்தது.
கைப்பேசியில் அவளின் தோழிகள், வாசுதேவனின் நண்பர்கள் எல்லோரும் தொடர்பு கொண்டார்கள்.
எத்தனை மணிக்கு வந்து சேரும் என்கிற தகவலை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
காலையில் வெளியில் பால் எடுக்கப் போன போது கேட்டுக்கு அருகில் கேமிராக்களுடன் நின்றிருந்த மீடியாக்காரர்கள், “மேடம் தகவல் வந்ததா?” என்றார்கள்.
ஸ்வப்னா, “என்னோட கணவர் வாசுதேவன் எப்ப வருவார்ன்னு இனிமே தான் போன் பண்ணுவாங்க” என்றபடியே கேட்டில் சொருகியிருந்த செய்தி தாள்களையும், டப்பாவிலிருந்து பால் பாக்கெட்டுகளையும் எடுத்துக்கொண்டு உள்ளே வந்து விட்டாள்.
ரிஷி, “என்னோட் பிரண்ட்ஸ் வெளியே நிக்கறாங்கம்மா” என்றான் அவள் உள்ளே நுழைந்தவுடன்.
“நாளைக்கு வர சொல்லுப்பா?”
“அம்மா ப்ளஸ்” என்றவன், சாவியை எடுத்து சென்று கேட்டை திறந்து நண்பர்களை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.
அதை பார்த்த ஸ்வப்னா, “மீடியா காரங்க உன்னிடம் எந்த கேள்வியும் கேட்கலையா?” என்றாள்.
“இல்லேம்மா, எங்களை தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொன்னேன், அமைதியா இருந்தாங்க” என்றான்.
மறு நாள் வாசுதேவன் உயிரற்ற உடலாக வந்து சேர்ந்தபோது இறுகிய மனதுடன் இருந்தாள்.
பத்திரிகையாளர்கள், மீடியாக் காரர்கள் உள்ளே வந்து கண்களை கூச வைக்கும் விளக்குகளில் படங்களை எடுத்து கொண்டிருந்தார்கள்.
ஒன்று மட்டும் சொல்லி விட்டாள். “நீங்க எப்படி சமூக பொறுப்போடு வேலை செய்கிறீங்களோ, அதுபோல அவர் நாட்டுக்காக எல்லையில் போராடினார், அதுக்கு சம்பளமும் வாங்கினார், அவ்வளவுதான். வேற எதுவும் கேள்வி கேட்காதீங்க, அவர் போரில் இறந்தது எனக்கு பெருமை தான்!” என்றாள்.
அவள் அழவேயில்லை.
ராணுவ மரியாதையுடன் வாசுதேவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து வந்த பத்திரிகை, விஷுவல் மீடியா அழைப்புகளை தவிர்த்தாள்.
நான்கு நாள் கடந்திருந்த நிலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
ஒரு நிருபர் பேசினார்.
“சொல்லுங்க, நான் தான் பேட்டி எதுவும் தர மாட்டேன்னு தெளிவா சொல்லிட்டேனே”
“இல்லைங்க மேடம்” சமூகத்தில் பிரபலமான ஒருவர் உங்க குடும்பத்துக்கு உதவி செய்ய போறதா தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்துட்டு இருக்காரு” என்றார்.
“இல்லைங்க, அதை பத்தி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை” என்று போனை வைத்து விட்டாள்.
ஒரு வாரம் கடந்த நிலையில் அந்த பிரபலம் வந்தார்.
குழந்தைகளின் படிப்பிற்கு தான் உதவுவதாகவும் அதை நாட்டுக்கு கடமையாக உணர்வதாகவும் சொன்னார்.
ஸ்வப்னா புன்னகைத்த படி சொன்னாள்.
“என் கணவர் நல்ல சம்பளம் வாங்கினார். இனி ஓய்வூதியமும் வரும். எங்க பசங்களை படிக்க வைக்க வேண்டிய பணம் எங்கிட்ட இருக்கு, உங்க கரிசனத்திற்கு மிக்க நன்றி”
“ஓ.கே. உங்க பசங்களோட நான் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா”
“வேண்டாங்க, எங்களுக்கு அதுல விருப்பம் இல்லை” என்றான், ரிஷி.
அவர் எழுந்து போய் விட்டார்.
வாசல் கேட்டை பூட்டும் போது ஆட்டோ வந்து நின்றது.
இளம் பெண்ணும், நாற்பது வயது மதிக்கத்தக்க நபரும் இறங்கினார்கள்.
அவர் கட்டைக் காலை ஊன்றி வந்தார்.
அவர்களை பார்த்ததும் யார் என்பதை ஸ்வப்னாவால் யூகிக்க முடிந்தது.
அவர்களை உள்ளே அழைத்து விட்டு, வாசல் கேட்டைப் பூட்டி வந்தாள்.
ஹாலில் உட்கார்ந்ததும்,
“எனக்கு மனசுக்கு ரொம்ப சங்கடமா போச்சுங்க, செய்தி பார்த்ததும், அன்னைக்கே என்னாலே வர முடியலை” என்றார்.
“ஜாகீர், உங்க பொண்ணு ஜலீனா நல்லா படிக்கறா இல்லே?” என்று அந்த நபரிடம் கேட்டாள்.
உடனே அந்த இளம்பெண் ஜலீனா, “நல்லா படிக்கறேன் அக்கா, இந்த வருஷம் டிகிரி முடிச்சுடுவேன்” என்றாள்.
“சார் ரொம்ப நல்லவரு, அவரோடு சேர்ந்து ராணுவத்தில் பணிபுரிந்த நாட்களை மறக்க முடியாது. போரில் எனக்கு கால் போனப்ப அவர் தான் தூக்கிட்டு ஓடி வந்தாரு. இப்ப நினைச்சாலும் கதி கலங்குது. சிகிச்சை முடிஞ்சு ஊருக்கு கிளம்பும் போது சொன்னாரு, ‘கவலைப் படாம போ. உன் பொண்ணு படிப்புக்கு நான் உதவி பண்றேன்னு’. நானும் ஆறுதலுக்கு சொல்றாருன்னு நினைச்சேன், ஆனா அடுத்த மாசத்திலிருந்தே நீங்க அனுப்பின தொகை வர ஆரம்பிச்சதும் இன்ப அதிர்ச்சியாயிட்டேன், இந்த வருஷம் ஆரம்பத்திலேயே மொத்தப் பணத்தையும் கட்டிட்டீங்க” என்றார்.
“அவர் இங்கே தான், வீட்ல இருக்கார் எல்லா இடத்துலயும் பரவி இறைவனை மாதிரி. நீங்க ரெண்டு பேரும் இங்க சாப்பிட்டு தான் போகணும்”
“சாப்பிட்டே போறோம்மா”
இருவரும் சாப்பிட்டு முடிந்து போகும் போது ஒரு சிறிய பொட்டலத்தை அவர் கையில் ஸ்வப்னா கொடுத்தாள்
“என்னம்மா இது?”
“அவர் ஏற்கனவே எனக்கு சொன்னது, ஜலீனாவுக்கு கல்யாணம் பண்ணும் போது நான் இருப்பேனா, இருக்க மாட்டேனான்னு எனக்கு தெரியாது. இந்த தொகையை கொடுத்துடுன்னு போன தடவை வந்தப்பவே சொல்லி கொடுத்தாரு”
“வேண்டாமா”
“வேண்டாம்ன்னு சொல்லாதீங்க, அவருக்காக வாங்கிக்கீங்க. அவர் ஆன்மா சந்தோஷப்படும். நான் காரியம் எல்லாம் முடிஞ்சதும் இங்கே காலி பண்ணிட்டு பெங்களூரூ போறேன், முகவரி எழுதி இந்த கவர் உள்ளேயே வச்சிருக்கேன், என் நம்பரும் இருக்கு. கல்யாணத்துக்கு சொல்லுங்க. நிச்சயம் வர்றேன்” என்றாள்.
“ரொம்ப நன்றிம்மா” என்று கூறிவிட்டு இருவரும் கிளம்பினர். வாசுதேவன் அவர்கள் கண்களுக்கு என்னென்றும் நெஞ்சத்தில் அணையாமல் சுடர் விடும் தியாக தீபமாக பிரகாசித்தான்.
காரியம் எல்லாம் முடிந்து பெங்களூரூக்கு சென்ற பின்னர் ஸ்வப்னாவுக்குள் அடக்கி வைத்திருந்த துக்கம் வெடித்து அழுகையாய் பீறிட்டது.
எங்கோ ‘இந்திய நாடு என் வீடு’ என்ற பாடல் ஒலிப்பது போல் இருந்தது.