என்.எல்.சி. புதிய அனல் மின்நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

என்.எல்.சி. புதிய அனல் மின்நிலையத்தில் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-14 22:45 GMT

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள ஆதண்டார்கொல்லையை சேர்ந்தவர் ராஜாராம்(வயது 45). இவர் என்.எல்.சி. புதிய அனல்மின்நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் பணியில் இருந்த ராஜாராம் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் ராஜாராமின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தது. அப்போது அவர்கள், ராஜாராமின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தனியார் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பேச்சுவார்த்தையில், இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்