எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக அரங்கம் அமைக்கும் பணி அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்
திருவாரூரில் நடை பெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக அரங்கம் அமைக்கும் பணியை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூர் வன்மீகாபுரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 19-ந் தேதி நடக்கிறது. விழாவிற்காக பிரமாண்டமான அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா நடைபெறுகிறது. விழாவிற்காக திருவாரூர் வன்மீகாபுரத்தில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து புறுப்பட்டு விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக காரில் திருவாரூர் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் கல்பாலம் ஆகிய 3 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. விழாவில் கலந்து கொண்டு 36 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்
முன்னதாக காலை 8 மணிக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான திறனறிவு புத்தாக்க பயிற்சியினை மன நல டாக்டர் கண்ணன், முன்னாள் எம்.பி ரபிபெர்னாட் ஆகியோர் வழங்குகின்றனர். விழாவில் அனைத்து துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
வாகனம் நிறுத்துவதற்காக திருவாரூர் புதிய பஸ்நிலையம், வர்த்தக சங்கம் கட்டிடம் அருகில் உள்ள திறந்தவெளி, ரெயில்வே குட்ஷெட், ஒழுங்குமுறை விற்பனை கூடம், வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி வாளாகம் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விழாவை நடத்திட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த போட்டியின் போது மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், கோபால் எம்.பி, மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, கலியபெருமாள் உள்பட பலர் உடனிருந்தனர்.