சேத்துப்பட்டில் வீடுபுகுந்து நகை-பணம் கொள்ளை

சென்னை சேத்துப்பட்டு லோகையா தெருவில் வீடுபுகுந்து நகை-பணம் கொள்ளை.

Update: 2017-08-14 21:30 GMT
சென்னை, 

சென்னை சேத்துப்பட்டு லோகையா தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் டெய்லர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சேத்துப்பட்டு கருக்காத்தம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி சாமி ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தைக்காண பொதுமக்கள் திரண்டிருந்தனர். சாமி ஊர்வலத்தை பார்க்கும் ஆர்வத்தில் வெங்கடேஷ் வீட்டை அவரது குடும்பத்தினர் திறந்து போட்டுவிட்டதாக தெரிகிறது.

அப்போது, வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளிப்பொருட்கள், 4 செல்போன்கள் மற்றும் 10 பட்டுப்புடவைகளையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

சாமி ஊர்வலத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேத்துப்பட்டு போலீசார் உடனடியாக இந்த வழக்கில் துப்பு துலக்கினார்கள். சாமி ஊர்வலத்தில் பக்தர்களை போல, புகுந்து ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்ட கண்ணகி நகரைச் சேர்ந்த 3 கொள்ளையர்களை போலீசார் உடனடியாக மடக்கி பிடித்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்