நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் ‘திடீர்’ தர்ணா
நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று ‘திடீர்’ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இதில் 33 வார்டுகளுக்கான துப்புரவு பணி ஒரு தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் நடைபெற்று வருகிறது. அந்த நிறுவனத்தில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாக ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 307 பேர் உள்ளனர். அவர்கள் வார்டுகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் துப்புரவு பணிக்காக அந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த ஜூலை மாதத்துக்கான சம்பளத்தை வழங்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பள பணத்தை உடனே வழங்கக்கோரி நகராட்சியில் 33 வார்டுகளில் துப்புரவு பணியில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை 7 மணி அளவில் நகராட்சி அலுவலகம் முன் திரண்டனர்.
தர்ணா
பின்னர் திடீரென அவர்கள் நாகர்கோவில் நகராட்சி அலுவலகம் முன் உள்ள சாலையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட வார்டுகளில் துப்புரவு பணிகள் நடைபெறவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு பணத்தை கொடுத்து, ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வழிசெய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.