இஸ்ரோவில் டிரைவர் பணிகள்

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவில், டிரைவர் பணியிடங்களை நிரப்ப இஸ்ரோ மைய ஆட்தேர்வு வாரியம் (ஐ.சி.ஆர்.பி.) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Update: 2017-08-14 10:30 GMT
 இலகு ரக வாகனம், கனரக வாகனம், ஸ்டாப் கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கு டிரைவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மொத்தம் 128 பணியிடங்கள் நிரப்பப்படு கிறது.
இந்த பணிகளுக்கு 28-8-2017 -ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, செல்லுபடியாகும் லைசென்சு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கட்டணத்தை ஆன்லைன், ஆப்லைன் இரு வழிகளிலும் செலுத்தலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 28-8-2017-ந் தேதியாகும். தபால் வழியில் அனுப்பப்படும் சான்றுகள் சென்றடைய கடைசி நாள் 4-9-2017-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.isro.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

மேலும் செய்திகள்