33-வது நாளாக காத்திருப்பு போராட்டம்: ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்றும் வரை போராட வேண்டும்
கதிராமங்கலத்தில் நேற்று 33-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பி.ஆர்.பாண்டியன், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்றும் வரை போராட வேண்டும் என கூறினார்.
திருவாலங்காடு,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கசிவு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதுதொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரும் ஜாமீனில் வெளியே வந்து விட்ட நிலையில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும், கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். நேற்று 33-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளரும், விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:-
காவிரி டெல்டாவில் இருந்து விவசாயிகளை வெளியேற்றி, டெல்டாவை பாலைவனமாக்க முயற்சி செய்கிறார்கள். நமது மண் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஓ.என்.ஜி.சி.யின் ஆய்வு பணிகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களின் போராட்டத்தால் தற்போது ஓ.என்.ஜி.சி. திணறி வருகிறது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்றும் வரை போராட வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகரத்தை ஒட்டி உள்ள 25 வருவாய் கிராமங்கள், நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் 22 வருவாய் கிராமங்கள் என மொத்தம் 47 கிராமங்களில் முதல் கட்டமாக 57 ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தை கைப்பற்றி பெட்ரோலிய ரசாயன மண்டலத்தை அமைக்கும் பணி தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதற்காக ரூ. ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளனர். தமிழக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதற்காக வருகிற 29-ந் தேதி தஞ்சை, நாகை. திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, பெட்ரோலிய ரசாயன மண்டலம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து மாதிரிமங்கலத்துக்கு சென்ற பி.ஆர்.பாண்டியன் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் அங்கு கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டனர்.