தொடர் விடுமுறை எதிரொலி: ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
சேலம் அருகே உள்ள ஏற்காட்டின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்த்து ரசிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
ஏற்காடு,
சேலம் அருகே உள்ள ஏற்காட்டின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்த்து ரசிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். சனி, ஞாயிறு தவிர இன்று (திங்கிட்கிழமை) கிருஷ்ணஜெயந்தி, நாளை சுதந்திரதினவிழா என தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது. அவர்கள் ஏற்காடு ஏரியில் உல்லாசமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகம் இருந்ததால் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் சிலர் தாங்கள் வந்த கார், வேன்களில் தூங்கியதை காணமுடிந்தது. வானம் மேகமூட்டமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு 11½ மணிக்கு தொடங்கி நேற்று காலை 10 மணி வரை மழை தூறிக் கொண்டே இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.