மாமண்டூர் பாலாற்று பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ராட்சத பள்ளம்

காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல், அத்திப்பட்டு, மாமண்டூர் பாலாற்று பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் மர்மநபர்கள் லாரி, டிராக்டர்களில் மணல் கடத்துகின்றனர்.

Update: 2017-08-12 23:06 GMT

பனப்பாக்கம்,

காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல், அத்திப்பட்டு, மாமண்டூர் பாலாற்று பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் மர்மநபர்கள் லாரி, டிராக்டர்களில் மணல் கடத்துகின்றனர். இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வந்தது. மணல் கடத்தலை தடுக்க நெமிலி தாசில்தார் பாஸ்கரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் பாலாற்று பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மணல் கடத்தும் வழி தடங்களை கண்டறிந்த அதிகாரிகள் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் 5 இடங்களில் ராட்சத பள்ளங்களை தோண்டினர். இதன் மூலம் மணல் கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என்றும் கண்காணிப்பு பணி மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்