பொதுமக்கள் போராட்டம் எதிரொலி கீரமங்கலத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது
பொதுமக்கள் போராட்டம் எதிரொலியாக கீரமங்கலத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
கீரமங்கலம்,
கீரமங்கலத்தில் 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 3 கடைகள் மூடப்பட்ட நிலையில் கீரமங்கலம் கடைவீதியில் ஒரு டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த டாஸ்மாக் கடையை அகற்றா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் அறிவித்தனர். இதனை தொடர்ந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் 50 நாட்களுக்கு பிறகு கடை மூடப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் 50 நாட்கள் கடந்த பின்னும் கடையை மூடவில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் டாஸ்மாக் கடைக்கு சென்று கடையை மூட முயன்றனர். இதையடுத்து டாஸ்மாக் கடை நிர்வாகத்தின் சார்பில் மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் இளைஞர்கள் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் கடையை உடனே மூட வேண்டும் என்று கோரி அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் திடீரென டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.மேலும் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியை அடைத்தனர்.
இந்நிலையில் அங்கு திரண்டிருந்த பெண்கள் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட வந்தனர். தடுப்புகள் வைக்கப்பட்டிருந்ததால் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்க துறை) இளங் கோவன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தலிபு, வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்கள் கடையை மூடும் வரை போராட்டம் நடக்கும் என்றனர். அதன் பின்னர் டாஸ்மாக் கடை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலை யில் அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது