ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் உச்சமாகாளியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக காலை அம்மனுக்கு பாலாபிஷேகம், சந்தனாபிஷேகம், பன்னீர் அபிஷேகம் மற்றும் முக்கனி அபிஷேகங்கள் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் 100, 500, 2,000 ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை சங்கரன் சுவாமிகள் செய்திருந்தனர்.
இதேபோல் பொன்னமராவதியில் உள்ள உடையப்பிராட்டி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திரளான பெண்கள் குத்து விளக்கு பூஜையில் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு உள்ள பூமரத்து விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
மேலும் ராயவரம், இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.