திருவொற்றியூரில் அதிகாரிகள் அலட்சியத்தால் மூடிக் கிடக்கும் நீச்சல் குளம்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே உள்ள சண்முகனார் பூங்காவை 1955–ம் ஆண்டு காமராஜர் திறந்து வைத்தார்.

Update: 2017-08-12 22:45 GMT

திருவொற்றியூர்,

 இங்கு கடந்த 2006–ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ரூ.35 லட்சத்தில் முன்னாள் கவுன்சிலர் பரசுராமன் நினைவு நீச்சல் குளம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.

வடசென்னையின் பல பகுதியில் இருந்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இங்கு வந்து குளித்து மகிழ்ந்து வந்தனர். தனியார் மூலம் நடத்தப்பட்டு வந்த இந்த நீச்சல் குளம் தற்போது பயன்பாடு இல்லாமல் மூடிக் கிடக்கின்றது. பூங்காவும் பயன்பாடு இல்லாமல் உள்ளது.

இதனால் சிலர் பூங்காவுக்குள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி கடந்த 6 மாதத்துக்கு முன்பு நீச்சல் குளத்தை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

ஆனால் இதுவரையும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வதால் நீச்சல் குளம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. திருவொற்றியூர் நகராட்சியாக இருந்த வரை முறையாக பராமரிக்கப்பட்ட நீச்சல் குளம், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கால் கேட்பாரற்று கிடக்கிறது. நீச்சல் குளத்தில் தேங்கி கிடக்கும் மழை நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்படும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்