வாத்துகளை கைது செய்த போலீசார்!

வாத்துகளின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், பேஸ்புக் மூலம் வாத்துகளின் கைது குறித்து தகவலை பதிவிட்டனர்.

Update: 2017-08-12 08:22 GMT
மெரிக்காவில் பெட்ரோல் நிலையத்துக்குள் ‘அத்துமீறி’ நுழைந்த வாத்துகளை போலீசார் கைது செய்தனர்.

பென்சில்வேனியா பகுதியில் சுற்றித் திரிந்த நான்கு வாத்துகள், வீட்டுக்கு அருகே உள்ள பெட்ரோல் நிலையத்துக்குள் நுழைந்துள்ளன.

அதைக்கண்ட பெட்ரோல் நிலைய ஊழியர்கள், போலீசாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், நான்கு வாத்துகளையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று காவலில் வைத்துள்ளனர்.

பின்னர், வாத்துகளின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், பேஸ்புக் மூலம் வாத்துகளின் கைது குறித்து தகவலை பதிவிட்டனர்.

அந்தப் பதிவு இணையத்தில் பரபரப்பாக, வாத்துகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. தகவலறிந்து குறிப்பிட்ட போலீஸ் நிலையத்துக்கு விரைந்த வாத்தின் உரிமையாளர், நான்கு வாத்துகளையும் மீட்டுச் சென்றுவிட்டார்.

ஆனாலும் அமெரிக்க போலீஸ்காரர்கள் அநியாய சுறுசுறுப்பு, பொறுப்பு காட்டு கிறார்கள். 

மேலும் செய்திகள்