நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திருவாரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர செயலாளர் பாவா வரவேற்றார். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் இமான்சேகர் கலந்து கொண்டு பேசினார்.
நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், அதனை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.