வெளிநாட்டினருடன் சுற்றுலா வழிகாட்டியாக வந்தவர் குளத்தில் குளித்த இலங்கை வாலிபர் கதி என்ன? தீயணைப்பு படையினர் தேடுகின்றனர்

வெளிநாட்டினருடன் சுற்றுலா வழிகாட்டியாக வந்தவர் குளத்தில் குளித்த இலங்கை வாலிபர் கதி என்ன? தீயணைப்பு படையினர் தேடுகின்றனர்

Update: 2017-08-11 22:30 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இவர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று விட்டு கிரிவல பாதையை சுற்றிப்பார்க்க செல்வார்கள்.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜாக்–நதாலிண்ணா தம்பதியினர் நேற்று கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் இலங்கை நாட்டை சேர்ந்த வாலிபர் புகழ் (வயது 27) என்பவர் சுற்றுலா வழிகாட்டியாக வந்திருந்தார். திருவண்ணாமலையில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு நேற்று மாலை அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள காட்டு சிவா குகையை தரிசனம் செய்ய சென்றனர்.

பின்னர் சுற்றுலா வழிகாட்டியான இலங்கை வாலிபர் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றா£ர். குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் முழ்கினார். அவரது கதி என்ன என்பது தெரியவில்லை. தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் அங்கு விரைந்தனர். தீயணைப்பு துறையினரும் அங்கு சென்று குளத்தில் இறங்கி தேடுதல் வேட்டை நடத்தினர். இரவு நேரமானதால் அவர்கள் தேடுதல் பணியை கைவிட்டனர். இந்த தேடுதல் பணி இன்று காலை மீண்டும் தொடங்கும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்