சேத்துப்பட்டு அருகே பெண் மீது தாக்குதல் தந்தை, மகன் கைது
சேத்துப்பட்டை அடுத்த பெரியகொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 45).
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டை அடுத்த பெரியகொழப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் தாஸ் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சாந்திக்கும், தாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தாசும், அவரது மகன் பழனியும் (30) சேர்ந்து சாந்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின்பேரில் பெரணமல்லூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து, தாசையும், பழனியையும் கைது செய்தனர்.