மது குடிக்க பணம் தர மறுத்ததால் அண்ணனை கத்தியால் தாக்கிய தம்பி கைது
சென்னையை அடுத்த மணலி சின்னசேக்காடு அவுரிகொல்லை மேடு, முனுசாமி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 38). இவருடைய தம்பி மணிவண்ணன்(35). இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
திருவொற்றியூர்,
சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த மணிவண்ணன், தனது அண்ணன் மாரிமுத்துவிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மணிவண்ணன், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மாரிமுத்துவின் முகத்தில் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.