பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொட்டியம் தாலுகா அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-08-10 22:45 GMT
தொட்டியம்,

தொட்டியம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க திருச்சி மாவட்ட குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சுந்தரராஜன், பாலகிருஷ்ணன், பெரியசாமி ஆகியோர் பேசினர்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில செயலாளர் ராமநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

பாலுக்கான கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு 35 ரூபாயும், எருமை பாலுக்கு லிட்டருக்கு 45 ரூபாயும் என தமிழக அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும், தமிழக அரசு ஒரு லிட்டர் பாலுக்கு ஊக்கத்தொகையாக ரூ.4 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்