நீச்சல் குளத்தின் பாதுகாப்பு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் விவகாரம் காரணமா?
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள வடுவூரை சேர்ந்த நீச்சல் குளத்தின் பாதுகாப்பு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காதல் விவகாரம் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருவாரூர் மாவட்டம் வடுவூர் வடபாதியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 24). இவர் திருச்சி அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் சிறுவர்-சிறுமிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று பகல், நீச்சல் குளத்தில் 4 பேர் பணியில் இருந்தனர். இவர்களில் 3 பேர் மதிய உணவு சாப்பிட சென்று விட்டனர். ஆனால் வினோத்குமார் மட்டும் செல்லவில்லை. சிறிதுநேரம் கழித்து உணவு சாப்பிட சென்றவர்கள் திரும்பிவந்து பார்த்தபோது, அங்குள்ள அறையில் வினோத்குமார் தூக்கில் தொங்கினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு வந்து அவரது உடலை பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமார் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.