தஞ்சையில் ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-10 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு முதல் தவணை செலுத்தும் கடமை மற்றும் பொறுப்புகளை என்ஜினீயர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு தொடர்பில்லாத நிலையில் அவர் களை பொறுப்பாக்குவது, அச்சுறுத்துவது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.

நீட்டிக்க வேண்டும்

வரலாறு காணாத வறட்சியில் தமிழகம் உள்ள நிலையில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டம் என்று அறிவிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும். அலுவலர்களை காரணம் இன்றி மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றம் செய்யும் சர்வாதிகார போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பொறியியல் அலுவலர்கள் கூட்டமைப்பினர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சங்கத்தினர், சாலை பணியாளர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்