ஓசூர் அருகே குப்பைமேட்டில் கிடந்த அரியவகை நடுகற்கள்

ஓசூர் அருகே குப்பைமேட்டில் கிடந்த அரியவகை நடுகற்கள்

Update: 2017-08-10 22:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அறம் கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், வெங்கடாசலபதி, மஞ்சுநாத்குமார் ஆகியோர் ஓசூர் அருகே பேரிகையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேரிகை பஸ் நிலையத்திற்கு எதிரே குப்பைமேட்டில், 14-ம் நூற்றாண்டை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அரிய வகை நடுகற்கள் எந்த பாதுகாப்புமின்றி குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து அறம் கிருஷ்ணன் கூறியதாவது:-ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் சமூக வரலாற்றையும், அவர்களின் பண்பாடு சார்ந்த வாழ்வியல் முறைகளை கண்டறிவதற்கும் இது போன்ற நடுகற்கள்தான் உதவி புரிகின்றன. ஆனால் கள ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட நடுகற்களில் பாதி உடைந்தும், சில நடுகற்கள் மண் மூடிய நிலையிலும் உள்ளன. அழியும் நிலையில் உள்ள இந்த வரலாற்று அடையாளங்களை, பாதுகாப்பதற்கான முயற்சியை, மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்