மதுக்கடை திறக்க எதிர்ப்பு: 2-வது நாளாக பெண்கள் போராட்டம்
தர்மபுரி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள மொன்னையன் கொட்டாய் பகுதியில் புதிய மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மதுக்கடை அமைக்கப்பட்டதற்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் அந்த மதுக்கடையில் மதுவிற்பனை தொடங்குவதாக தகவல் வெளியானதால் அந்த பகுதியில் பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் முயற்சியிலும் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் புதிய மதுக்கடையில் நேற்று முன்தினம் சிறிது நேரம் மது விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அந்த மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடை முன்பு திரண்டனர். அங்கு முற்றுகையிட்டு அமர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அந்த மதுக்கடை வழக்கமான நேரத்தில் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டிருந்தது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தாசில்தார் ஜெயலட்சுமி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மது அருந்த வருபவர்களால் பொதுமக்கள், பெண்கள், மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர்பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று மாலை வரை பெண்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று காலை முதல் மாலை வரை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.