ஆடுகளை பாதுகாக்க அமைத்திருந்த வேலியில் சிக்கிய மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து சென்றனர்
ஆரல்வாய்மொழி அருகே ஆடுகளை பாதுகாக்க அமைத்திருந்த வேலியில் மலைப்பாம்பு சிக்கியது. அதை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர், இந்திராகாலனியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 67). இவர் வீட்டின் பின்பகுதியில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை பாதுகாக்க வீட்டை சுற்றிலும் கம்புகளால் வேலி அமைத்துள்ளார். மேலும், அந்த வேலியில் நைலான் வலை கட்டியுள்ளார்.
இந்தநிலையில், நேற்று காலை வேலியில் இருந்த வலையில் ஒரு மலைப்பாம்பு சிக்கி இருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் பரமசிவனிடம் கூறினர். அவர், நாகர்கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
வன ஊழியர் துரைராஜ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வேலியில் சிக்கி இருந்த மலைப்பாம்பை பிடித்தனர். அது சுமார் 10 அடி நீளத்தில் இருந்தது. பின்னர், பாம்பை சாக்கு பையில் கட்டி அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். அந்த பாம்பு ஆடுகளை பிடிக்க வந்ததாக தெரிகிறது. ஆனால், வேலியில் சிக்கியதால் ஆடுகள் உயிர்தப்பின.
இதுபோல், வனப்பகுதியில் இருந்து பாம்பு போன்ற கொடிய பிராணிகள் அடிக்கடி மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு வருகின்றன. இவற்றை பொதுமக்கள் கண்டதும் வனஅலுவலகத்திற்கு தகவல் கொடுக்கிறார்கள். ஆனால், ஆரல்வாய்மொழியில் உள்ள வன அலுவலகத்தில் விலங்குகளை பிடிக்க ஆள் இல்லாததால் நாகர்கோவிலில் இருந்து ஊழியர்கள் வருகிறார் கள். அதற்குள் அந்த விலங்கு சில நேரத்தில் தப்பி செல்கிறது. எனவே, ஆரல்வாய்மொழியில் உள்ள வன அலுவலகத்தில் விலங்குகளை பிடிக்கும் நபரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.