ஆட்டையாம்பட்டி அருகே கூலி தொழிலாளி கொலை
ஆட்டையாம்பட்டி அருகே கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
ஆட்டையாம்பட்டி,
பெருமாள் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஏரிக்காட்டில் வசித்து வரும் கனகராஜ் வீட்டுக்கு சென்றார். கனகராஜ், பெருமாளின் மாமன் மகன் ஆவார். அப்போது கனகராஜீக்கும், அவரது சித்தப்பாவான அப்பாவு என்பவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.
இதைப் பார்த்த பெருமாள், கனகராஜை சமாதானப்படுத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்த பெருமாள், கனகராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ், பெருமாளை தாக்கி கீழே தள்ளிவிட்டார். அப்போது கீழே விழுந்ததில் பெருமாளின் மண்டையில் கல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசில் அவரது அண்ணன் மணி புகார் செய்தார். மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக தப்பி ஓடிய கனகராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.