பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக இயற்கை உழவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக இயற்கை உழவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக இயற்கை உழவர் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். தமிழக இயற்கை உழவர் இயக்க கிளை செயலாளர்கள் வைரமூர்த்தி, சுரேஷ், முருகதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியாவில் மரபணு மாற்று தொழில் நுட்ப ஆராய்ச்சி செய்வதை தடை செய்ய வேண்டும். காய்கறிகள், பருப்பு வகைகள், தானிய வகைகளில் மரபணு மாற்று தொழில் நுட்பத்தை புகுத்துவதை நிறுத்த வேண்டும்.
விவசாயத்தை பெருக்குவதற்கு புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வரும்போது உழவர்களும், நுகர்வோர்களும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். நுகர்வோர்களுக்கு பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழக இயற்கை உழவர் இயக்க கிளை செயலாளர்கள் சுப்பிர மணியன், பன்னீர்செல்வம், குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.