தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்

தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்

Update: 2017-08-09 22:15 GMT
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள மாரங்குடி ஊராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி நேற்று மாரங்குடி, திருநெல்லிக்காவல் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தேவராஜன், வடபாதிமங்கலம் வருவாய் ஆய்வாளர் பிரதீபா, வடபாதிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்